தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில், ஒரு பத்தி அளவோ அதற்கும் குறைவான அளவோ மட்டுமே உள்ள கட்டுரைகள் 'குறுங்கட்டுரைகள்' என முத்திரை குத்தப்படுகின்றன. பெரும்பாலான குறுங்கட்டுரைகள், கட்டுரை தலைப்பு குறித்த சிறிய, ஆர்வத்தைத் தூண்டும் துணுக்குகளைத் தருவதோடு முழு வடிவம் பெறாமல் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரி குறுங்கட்டுரைகளளை இனங்கண்டு, அந்தந்த பக்கங்களில் மேலும் அதிக விவரங்களைத் தொகுப்பதன் மூலம் அவற்றை முழுமையடையச் செய்ய உதவலாம்.
பொருளடக்கம் |
நீங்கள் புதிதாக ஒரு கட்டுரையை உருவாக்கும் பொழுது, அது 'குறுங்கட்டுரை' என வகைப்படுத்தத் தக்கது என்று எண்ணினால் , பின்வரும் 'காட்டி'-யைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்:{{stub}} இவ்வாறு செய்தால், கீழ்க்காணப்படும் முத்திரை தானாகவே தோன்றிவிடும்.
|
இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இவ்வாறு அறிவிப்பது அனைவரையும் அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.
ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணினால் , பின்வரும் 'காட்டிகளில்' (Tags) பொருத்தமாக இருக்கக்கூடியவற்றைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.
இவ்வாறு அறிவிப்பது, பங்களிப்பாளர்கள் தத்தம் விருப்பத் துறைகளில் உள்ள குறுங்கட்டுரைகளை எளிதில் இனங்கண்டு, அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.
stock | retire | vm
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History